Saturday, May 23, 2020

பணப்புழக்கத்தை பெருக்க இந்தியா என்ன செய்ய முடியும் ?


பணப்புழக்கத்தை பெருக்க இந்தியா என்ன செய்ய முடியும் ?
யுவராஜ் சம்பத்...23.05.2020
----------
கடந்த வாரம் பாரத பிரதமர் வைரஸ் தாக்குதல் நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி அறிவித்தபோது அதற்கு எத்தனை பூஜ்யம் என்று பெரியவர்கள் கூட வாயைப் பிளந்து பார்த்தார்கள்.
அதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் ஐந்து நாட்கள் தொடர்ந்து அந்த 20 லட்சம் கோடி பற்றிய விளக்கவுரை அளித்தபோது,பத்திரிகையாளர் திரும்பத் திரும்ப ஒரு கேள்வி  கேட்டனர்.
அந்த கேள்வி  இருபது லட்சம் கோடி எங்கிருந்து வரப்போகிறது என்பது தான். ஆனால் வழக்கமான ஒரு பதிலையே நிதியமைச்சர் சொன்னார் அது கேள்வி கேட்காதீர்கள்..
எங்கிருந்து வரும் என்பது எங்களுக்கு தெரியும் என்பதாக இருந்தது. பொதுவெளியில் இந்த 20 லட்சம் கோடியை எப்படி எல்லாம் நிதியமைச்சர் திரட்ட போகிறார் என்கிற சந்தேகம் இன்னும் இருக்கிறது.
எப்படி எல்லாம் திரட்ட முடியும் என்பதை பற்றி அல்லது இதே போன்ற பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மற்ற நாடுகள் எப்படி திரட்ட முடிவு செய்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்கும்பொழுது
நம்முடைய நிதியமைச்சர் எந்த வழியில் செல்வார் என்பதை கொஞ்சம் யூகிக்க முடிகிறது.
எந்த செலவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற வருமானம் இருக்க வேண்டும் அல்லது கடன் வாங்கி செலவு வழி செய்ய வேண்டும். இப்போது இருக்கிற நிலையில் இந்தியாவில் வரி வருமானம் எதிர்பார்த்ததை விட குறைவாகவே கிடைக்கும். அதனால் தற்போது இருக்கிற வரி விகிதங்களை உயர்த்தலாம். ஆனால் அரசு உயர்த்தவில்லை. அரசிடம் இருக்கிற ஒரே வழி கடன் வாங்குவது என்பது மட்டுமே.
அந்தக் கடனையும் நீண்ட கால கடன் குறுகிய கால கடன் என்று இரண்டு விதமாக வாங்கினாலும் இரண்டும் இப்போதிருக்கிற அரசையும் அடுத்து ஆட்சி மாற்றம் வந்தால் வரப்போகிற புதிய அரசையும் நிதி சிக்கலில் தள்ளும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்து.
நமது அண்டை நாடான இந்தோனேசியாவில், நீண்டகால அரசு கடன் பத்திரங்களை வெளியிட்டு,நிதி திரட்ட உள்ளார்கள். (50 வருட காலம்). வெளினாடுகளில் குறைந்த வட்டிக்கு  நிதி திரட்டினாலும்
இது அமெரிக்கன் டாலர் முக மதிப்பை கொண்டது. இந்த பத்திரங்களுக்கு சிங்கப்பூர், அமெரிக்கா மட்றும் ஐரோப்பாவில் இருக்கும் முதலீட்டாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
தற்பொழுது இந்தோனேஷியாவின் ஜிடிபியில் 30% மட்டுமே கடன் இருப்பதால் இதற்கு  வரவேற்பு இருக்கிறது. இந்த கடன் 100% ஏற்றுமதியில் கிடைக்கிற வருமானத்தை வைத்து மட்டுமே அடைக்கப்பட வேண்டும் என்பதால் இந்தோனேஷியா ஏற்றுமதி வணிகத்தில் மிகத் தீவிரமாக ஈடுபடும். சைனாவில் இருந்து வெளியேறிய கம்பெனிகள் இந்தோனேஷியாவில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க படுவார்கள்.
இந்தக் கடன்கள் எப்படி செலவு செய்யப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் முதலீட்டாளர்களை விதிப்பார்கள்.இந்தோனேஷியா அவர்கள் சொல்லுகிறபடி வரி விகிதங்களை மாற்றலாம்.
ஆனால் கனிம வளமும் விவசாயப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்் கொண் அர்ஜென்டினாவில்ட நிலைமை வேறு மாதிரி இருக்கிறதுது
ஏற்கெனவே பல்வேறு நிதி நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் அர்ஜென்டினாவில் கடந்த மூன்று வருடங்களில் மட்டும் டாலருக்கு நிகரான மதிப்பில் அர்ஜென்டினாவின் ப்ரோ நாணயம் சற்றேறக்குறைய 30 சதவீதத்திற்கு மேல் குறைந்திருக்கிறது. அதனால் வெளிநாடுகளில் அர்ஜென்டினாவின் கடன் பத்திரங்களுக்கு மிகப்பெரிய ஒரு மதிப்பு இல்லை. இந்த நேரத்தில் அவர்களுக்கு இருக்கிற ஒரே வழி, வரி விகிதங்களை மாற்றி அமைத்து பல்வேறு வரிகளை உயர்த்துதல் மட்டுமே. அதனால்  தன்னுடைய ஜிடிபி மதிப்பில் 2.7 சதவீதம் மட்டுமே வைரஸ் நிவாரண நிதியாக அறிவித்துள்ளது.
 வரி விகிதங்கள்அதிகரிக்கப்படுகிறது பணக்கார வர்க்கம் பாதிக்கப்படுவதும், நாட்டு மக்களை தேசபக்தி என்ற பெயரால் திசை திருப்புவதும் எல்லா அரசுகளுடைய கடமையாக இருக்கிறது.
 அதேபோலவே தாய்நாட்டு வரி, தேசபக்தி என்கிற பெயரில் அர்ஜென்டினா அரசாங்கம் பணக்காரர்களுக்கு வரி விதித்திருக்கிறது. மேலும் 30 சதவீத அளவுக்கு புதிய புதிய கரன்சி நோட்டுகளை அச்சிடவும்
 முடிவு செய்திருக்கிறது. இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். இருந்தாலும் அதை சமாளிக்க அர்ஜென்டினா அரசு தயாராகிக் கொண்டு வருகிறது.
அமெரிக்கா ,கனடா,இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகள் மிகச் சிறந்த பொருளாதார நிலையில் இருப்பதால் அவர்களுக்கு பாதிப்பு இருக்க வாய்ப்புகள் குறைவு.
ஆப்பிரிக்க நாடுகளை பொருத்த அளவுக்கு வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இன்றுவரை இல்லாததாலும், அவர்ளுடைய பொருளாதாரம் மற்ற உலக நாடுகளின் பொருளாதாரத்தை எந்தவிதத்திலும் பாதிக்காது என்பதாலும், ஆதரவுக்கு சைனா எப்பொழுதும் கைகொடுக்கும் என்பதாலும் அவர்களுக்கு பெரிய கவலை இல்லை.

முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள்  இந்திய அரசுக்கு தேவை 2 லட்சம் கோடி மட்டுமே என்று சொல்கிரார்.
இதை சமாளிக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து  வருகிறது..அன்னிய முதலீடுகளை ஈர்க்கிறேன் என்கிற பெயரில் முக்கியமான அரசு நிறுவனங்களை விற்க முடிவு செய்துள்ளது.
அதே நேரத்தில் அந்த முதலீடுகள் சைனாவில் இருந்து வந்தால் தடுக்கவும்,அமெரிக்காவில் இருந்து வந்தால் வரவேற்க்கவும் முடிவு செய்துள்ளது.அதன்மூலம் அமெரிக்காவினுடைய அடிமையாக தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது என்பது பல்வேறு அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது..
நேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை குறைத்து ஒரு கொள்கை முடிவை அறிவித்தார்.அதற்கு முக்கியமான காரணம் வங்கிகள், அரசு அறிவித்த படி பொதுமக்களுக்கு தேவையான அளவுக்கு கடன் வழங்கவில்லை என்பதும் அரசுடைய,பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்பதையும் காட்டுகிறது. அதனால் அரசு வேறு வழிகளை யோசிக்கக் கூடும் .அதில் ஒன்று புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவது
புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு அந்த நாடுகளின் ரிசர்வ் வங்கியில் இருக்கிற தங்கத்தின் மதிப்பு மற்றும்  ஜிடிபியின் வளர்ச்சியுமே முக்கிய காரணமாக இருக்கும்.
 தற்போது ஜிடிபி  சென்ற வருடத்தை விட 5%  குறைவாக இருக்கும் என்று கணிக்கும்போது, அதிக ரூபாய்  நோட்டுகளை அச்சிடுவதற்கு ரிசர்வ் வங்கி இந்திய அரசிடம் ஒரு உத்தரவாதம்( Bond) கேட்கலாம். அதேநேரம் இந்திய அரசு இந்திய மக்களிடம் இருக்கிற தங்கத்தை கைப்பற்றுவதற்கு கோல்ட் பாண்ட் என்கிற ஒரு உத்தியை கையாளலாம். இதன் மூலம் யார் எவ்வளவு தங்கத்தை அரசுக்கு விற்றாலும்,
 அதற்கு தனக்குத் தேவையில்லை என்றும், அந்த மதிப்பிற்க்கு  அரசு பாண்டுகள் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் என்றும், இந்த பாண்டுகளை அடமானம் வைத்தோ அல்லது விற்றோ
 பொதுமக்கள் தங்களுடைய பணத்தை திரும்பிப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறலாம்.  உலக தங்க கட்டுப்பாட்டு நிறுவனம் இந்திய பொது மக்களிடம் 25,000 டன் தங்கம் இருக்கலாம் என்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் சற்றேறக்குறைய 1,000 டன் தங்கம் அரசுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் போக திருப்பதி தேவஸ்தானம் உள்ளிட்ட கோயில்களின் தங்கம் தேவையின்றி வங்கிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்கத்தையும் அரசு கைப்பற்ற முயலலாம். இதனுடைய மதிப்பு 5.00 லட்சம் கோடிகள். உலகின் செல்வந்த நாடுகள் என்று கூறப்படுகிற அமெரிக்காவில் 8000 டன் தங்கம் பெடரல் வங்கியின் இருப்பில் உள்ளது.ஜெர்மனியில் 3 ஆயிரத்து 300 டன், இத்தாலி பிரான்ஸ் சைனா போன்றவை 2500 தங்கம் கையிருப்பில் வைத்திருக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியில் 618 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது.இதனுடைய மதிப்பு 2.50 லட்சம் கோடிகள்.  இப்படிப் அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் இந்த அரசு குரானா வைரஸ் மற்றும் அவர்களின் படத்தையும் போட்டுக்கொள்ளலாம்.
 இந்தியாவில் சற்றேறக்குறைய 20 கோடி குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது பத்தாயிரம் ரூபாயை பணமாக அளிக்கலாம்.
இந்தப்பணம் உடனடியாக சந்தைக்கு வரும் என்பதால், பொருளாதரம் உடனடியாக பயணிக்கத்தொடங்கலாம்..
வைரஸ் பாதிப்பிற்கு பின்னால் உலக நாடுகளின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்கிற பொருளாதார நிபுணர்களின் கணிப்பில் இந்தியா டபிள்யூ நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
 அதாவது பொருளாதாரம் சரிந்து மேலேறி மீண்டும் சரிந்து மீண்டும் மேலே ஏறும் அதனால் இந்தியா பல்வேறு கலவையான ஒரு நிலை தான் எடுக்கும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இதை பற்றி இந்த அரசு சிந்திக்குமா ? அல்லது மீண்டும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுமா என்பதை யார் அறிவர்??

M.M.Sampath Kumar .
P 2 Clothing Company
#08,Narayanasamy Nagar, Gandhi Nagar PO
Tirupur..India ..641 603
email. sam@p2clothing.in
skype..sam47401..
Ph ; +91 989  473 6388 
Twitter..@sam4740
Blog. https://yuvrajsampath.blogspot.com/


Sunday, May 10, 2020

இலவசமும் டாஸ்மாக்கும்..


இலவசமும் டாஸ்மாக்கும்..யுவராஜ் சம்பத்..10.05.2020


கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் பல்வேறு பகுதியில் இருந்தும் பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஒரு பயம் எப்பொழுதும் இருக்கும். எவ்வளவு வசதியாக வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருந்தாலும்
கொறோனாபோன்று பெரும் துயரம் தாக்குகின்ற காலத்தில், என்ன ஆனாலும் சரி தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி விடலாம் என்கிற மனநிலைக்கு வருவது இயல்பு.
தற்போது அந்த மனநிலைக்கு தான் வந்திருக்கிறார்கள். அதனால்தான் அப்படி ஊருக்கு திரும்புகிறார்கள். இதற்கு தடை ஏற்படும் பொழுது கொந்தளிக்கிறார்கள்.
இப்படி திரும்புபவர்கள்  மீண்டும் தங்களுடைய பணி இடத்திற்கு வருவதற்கு சில காலம் பிடிக்கலாம். இதை பல்வேறு பொருளாதார நிபுணர்களும் அறிஞர்களும் ஆலை முதலாளிகளும்
ஏன் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூட ஆமோதிக்கிறார்கள். அப்படி நேரும்போது,பல்வேறு தொழில்கள் மூடப்படலாம். இன்று கூட தமிழகத்தில்  நூற்பு ஆலைகள், இரும்பு வார்ப்பட ஆலைகள் ஆயத்த ஆடைகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள் என்கிற அய்யம் எழுகிறது.
அதே நேரத்தில் ஏன் இதற்கு ஏற்ற தொழிலாளர்கள் தமிழகத்தில் இல்லையா என்கிற கேள்வியும் எழுகிறது.
தமிழக இளைஞர்கள் திராவிட இயக்கத்தின் உந்துதலால் உதவியால் படித்து முன்னேறி பல்வேறு வெளிநாடுகளில் அல்லது வெளியூர்களில் மிகச்சிறந்த பணிகளில் இருக்கிறார்கள் என்று சொன்னாலும்
அந்த சதவீதம் குறைவு என்பதும்,கோவயில் துப்புறவு பணிக்கு முது நிலை பட்டதாரி விண்ணப்பித்து வேலை பெற்றுள்ளார் என்பதும் உண்மயே..
நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்ய வருபவர்கள் அதிகம் என்பதும் நமக்கு நன்றாக தெரிகிறது. அப்படியானால் இது என்ன விதமான ஒரு வெற்றிடம்?
 இந்த வெற்றிடத்தை நிரப்புவது எப்படி? நானறிந்தவரை தமிழகத்தில் எந்தத் தொழிலிலும் தனித்திறமை( Skilled labour) பெற்றிருக்கிற தொழிலாளர்களுக்கு குறைவில்லை.
 அதே நேரத்தில் தனித்திறமை இல்லாத தொழிலாளர்களுக்கு பஞ்சமில்லை.எந்த தொழிலாக இருந்தாலும் இப்போது பழகுவது சிரமமில்லை. அப்படித்தான் வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்கள் மிகவும் குறுகிய காலத்தில் வேலையை கற்றுக் கொள்ளுகிறார்கள்.அதை ஏன் தமிழக இளைஞர்கள் செய்வதில்லை? ஏன் செய்ய முயற்சிப்பதில்லை? அவர்களைத் தடுப்பது எது?
ஏதோ ஒரு கல்லூரியில், ஏதோ ஒரு பட்டம் பெற்றுவிட்டால்,அரசுப்பணிதான் செய்வேன் என்னும் பிடிவாதமா? அல்லது தாழ்வு மனப்பான்மயா? அல்லது எல்லாம் இலவசமாக கிடைக்கும்போது ஏன் வேலை செய்ய வேண்டும் என்னும் எண்ணமா?
டாஸ்மாக் மற்றும் நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி ,இலவச சைக்கிள் இத்தியாதி இத்தியாதி இந்த இரண்டும் ஆளும் அரசுகள் மக்களை திட்டமிட்டு ஏமாற்றிய ஒரு செயலாகத்தான் பார்க்கிறோம். கொடுப்பதைப் போல் கொடுத்துவிட்டு பிடுங்கிக் கொள்கிறார்கள்.
தமிழக அரசின் டாஸ்மாக் வருவாய் சற்றேறக்குறைய 30 ஆயிரம் கோடி ரூபாய் என்றால் தமிழக அரசு இலவசமாக கொடுப்பது ரேஷன் கடைகள் மூலமாக 6 ஆயிரம் கோடி கால்நடை வழங்குவதற்கு 250 கோடி இலவச பேருந்து வசதிக்காக 800 கோடி இலவச வேட்டி சேலை 500 கோடி தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் பயன்படுவதற்கு ஆயிரம் கோடி பள்ளிக்கல்வி குழந்தைகளுக்கு இலவச சைக்கிள் புத்தகத்தை வாங்க ஆயிரத்து 500 கோடி மடிக்கணினி வாங்க 800 கோடி திருமண உதவித் திட்டம் ஆகிய நூறுகோடி ஆக மொத்தம் 11 ஆயிரம் கோடி மட்டுமே.
 ஒரு வாரத்திற்கு முன்னால் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நாகர்கோவிலிருந்து ஒரு சகோதரி பங்கேற்றார் அவர் சொன்னது நெற்றிப் பொட்டில் அறைந்தது போல் இருந்தது. அவருடைய கணவர் வாரம் ஆயிரத்தி ஐநூறு ரூபாய்க்கு குடிக்கிறார். ஒரு வாரம் டாஸ்மாக் மூடினால் அவரது வீட்டில் இலவச ஃபேன். அடுத்த வாரம் டாஸ்மாக் மூடினால் இலவச கிரைண்டர். அடுத்த வாரம் டாஸ்மாக் மூடினால் இலவச மிக்ஸி.
இன்னும் என்னவெல்லாமோ சுயமரியாதையை இழக்காமல் தாங்களாகவே விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும். அதுவுமன்றி குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
 அதை ஏன் ஏற்க மறுக்கிறோம் ? சிந்திப்போமா?
கோறோணாவின் பாதிப்பால் இங்கே தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாகும். இதை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் என்பதை இந்த அரசுக்கு யார் புரியவைப்பது?
இரண்டு நாட்கள் சாராயக்கடை திறந்ததற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு சாவு.இதற்கு யார் பதில் சொல்வது?கள்ள சராயத்தால் மடுமல்ல நல்ல சாராயத்தாலும் சாவு வரும் என்பது கூட புரியாத மூடர்களா நாம்?

M.M.Sampath Kumar .
P 2 Clothing Company
#08,Narayanasamy Nagar, Gandhi Nagar PO
Tirupur..India ..641 603
email. 
sam@p2clothing.in
skype..sam47401..
Ph ; +91 989  473 6388 

Twitter..@sam4740