Friday, June 26, 2020

கனவு பத்திரிக்கைக்காய் எழுதியது..


முகக் கவசம் போட்ட அம்மாவை நான் எப்படி முத்தமிட?
யுவராஜ் சம்பத்..25.06.20
====================
சக்திமான்
நீ ரொம்ப பவர்ஃபுல்லா?
அம்மா சொன்னாங்க
கேட்டது எல்லாம் குடுப்பியா.?
மூன்று மாதமாய் முடங்கிப்போன
குழந்தை முணுமுணுப்பது கேட்டது.
ஒட்டுக்கேட்டல் ஒன்றும்
பெரிய தவறில்லை
பெற்றவள் தானே நான்..

மூணு மாசமா என்ன
வீட்டுக்குள்ளேயே அடச்சுட்டாங்க.
எனக்கு வெளில போகணும்.
ஃப்ரெண்ட்ச பார்க்கணும்.
அவங்க சட்டை நுனி பிடிச்சு
ட்ரெயின் விளையாடணும்.
தட்டாம் பூச்சி தொரத்தணும்
பார்க்ல ஊஞ்சல் ஆடணும்..
பன்னீர் பூ பொறுக்கி
பாட்டிம்மாட்ட குடுக்கணும்
அக்கா வாசல்ல போட்ட
ரங்கோலி கோலம்
மழையில் நனையரத 
உட்கார்ந்து வேடிக்கை பாக்கணும்.
அம்மா விட மாட்டேன்றாங்க
ஏன் சக்திமான்??
தாத்தா கூட பாவம்.
நியூஸ் பேப்பர் வர்ரதில்லை
அவரு டிவி பார்க்க முடியாது
படுத்துட்டே இருக்காரு.
பாட்டியை கூட
பக்கத்து வீட்டு ஆயா கூட
உட்கார்ந்து தாயம்
ஆட விட மாட்டேன்றாங்க
ஏதோ காரணமா, ஏன்?

எனக்கு ஸ்கூல் போகணும்.
வனிதா டீச்சர பாத்து
தமிழ்ல வணக்கம்ன்னு சொல்லணும்.
வாட்ஸ்மேன் சாருக்கு குட் மார்னிங் சொல்லணும்
ஆயாம்ம கை பிடிச்சு அவசரமில்லாமா ஸ்கூல் போகணும்.

வீடியோ கேம்ஸ் விளையாடற கம்ப்யூட்டரில்
பாடம் நடத்துகிறாங்க.
ஒரே போர் அடிக்குது
கண்ணு வலிக்குது.
சோப்பு போட்டு
சோப்பு போட்டு
கை கழுவி,
மாஸ்க் போட்டு
கசாயம் குடிச்சு
அய்யோ.. முடியல சக்திமான்.
எதோ கொறோனாவாமா
அதை ஒழிக்க உன்னால மட்டுந்தா முடியுமாமா.
அம்மாவும் சொன்னாங்க
எங்க முதல்வர் அய்யாவும் சொன்னாங்க
அத நீ மட்டும்தான் செய்வியாமா
ப்ளீஸ் செய்யேன்..

 அழையா விருந்தாளியாய் யார் வந்தாலும்
அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி
அரை மணி நேரம்  அளாவுவது அந்தக் காலம்.
அண்ணன் தம்பியே வீட்டுக்கு வந்தாலும்
சானிடைசர் கொடுத்து, முகமூடி சரிசெய்து
மூணு அடி தள்ளி உட்கார்ந்து
மூன்று நிமிடத்தில் பேசி முடித்து
வெளியே அனுப்புவது இந்தக்காலம்.
அடுப்படியில் அரை மணி லேட் ஆனாலும்
 அமைதியாய் இருக்கும் அம்மா..
 இந்தக்காலம்....
அஞ்சு நிமிஷம் லேட் ஆனாலும்
காலில்சுடுதண்ணீர் கொட்டியது மாதிரி
ஆட்டம் ஆடியது அந்த காலம்.
அரக்கப்பரக்க அலுவலகம் செல்லும் அப்பா
 அது அந்தக்காலம்..
அரைக்கால் டவுசர் அணிந்து
அயர்ந்து தூங்குவது இந்தக்காலம்...

நீதான் பவர்ஃபுல் காட் ஆச்சே
அது கூட சண்டை போட்டு
தொரத்தி விடு.
ஏன்னா
முகக் கவசம் போட்ட அம்மாவை
நான் எப்படி முத்தமிட?
தேஞ்சு போன கையோட இருக்குற அப்பாவ
எப்படி நான் கட்டிப்பிடிச்சு தூங்க?
======================
M.M.Sampath Kumar .
P 2 Clothing Company
#08,Narayanasamy Nagar, Gandhi Nagar PO
Tirupur..India ..641 603
email. sam@p2clothing.in
skype..sam47401..
Ph ; +91 989  473 6388 
Twitter..@sam4740
Blog. https://yuvrajsampath.blogspot.com/




Saturday, June 20, 2020

திருப்பூர் இப்போது எதை நோக்கி பயணிக்க வேண்டும்? யுவராஜ் சம்பத்..21.06.2020


திருப்பூர் இப்போது எதை நோக்கி பயணிக்க வேண்டும்?
யுவராஜ் சம்பத்..21.06.2020
------------------
நீங்கள் பொழுது போக்கவோ அல்லது பொருள் ஈட்டவோ வரலாற்றின் பக்கங்களை புரட்டுபவராக  இருந்தால், நீங்கள் கட்டாயம் ஒரு விஷயத்தை உள் வாங்கி இருக்க முடியும்.
அது எந்த ஒரு பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னாலும் ஒரு புதிய தொழில்நுட்பம் அல்லது ஒரு புதிய விற்பனைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் .இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 1930 இல் கிரேட் டிப்ரஷன் என சொல்லப்படுகிற உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம்தான் xerox photocopier.Face book, LinkedIn, Google போன்றவையும் அப்படி கண்டுபிடிக்கப்பட்டவையே.அதேபோல இன்னும் பத்து இருபது வருடங்களுக்கு பின்னர் உலக அளவில் மிகப் பிரபலமாக பேசப்படும் என்று நம்பப்பட்ட ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்  ( AI)மற்றும்  இல்லத்தில் இருந்தபடியே அலுவலகப் பணி (WFH) இந்த இரண்டையும் இன்றைக்கு மிக எளிதாக சாத்தியப்படுத்தி இருக்கிறது covid-19,கொரோனா வைரஸ்..
திருப்பூர் எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிற கட்டுரையின் தலைப்புக்கு பின்னால் இவைகளுக்கு என்ன வேலை என்று எண்ணுகிறவர்கள்  தொடர்ந்து படியுங்கள்.
Covid-19 க்கு இன்றுவரை எந்த தீர்வும் ஏற்படவில்லை. மருந்து மாத்திரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. போதிதர்மர் வந்தால்தான் இதை சரிப்படுத்த முடியும் ,ஆகவே தங்கை ஜோதிகா உங்கள் வீட்டுக்காரரை கொஞ்சம் அனுப்புங்கள் என்று ஒரு ட்விட்டரில் ஜோக் அடிக்கிர சமூகம் ,அப்படி எளிதாக எள்ளி நகையாடி இதை புறந்தள்ளிவிட முடியுமா? முடியாது.
இந்த நோய் உலகளவில் பெரிய பொருளாதார சரிவை ஏற்படுத்தி உள்ளது.இதிலிருந்து மீள்வது மிகக்கடினம் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த உண்மை.
இந்தப் பொருளாதார சரிவிலிருந்து நம்மை, நம் தொழிலை எப்படி காப்பாற்றப் போகிறோம்?. மீண்டும் புதிய தொடக்கத்தை எப்படி சந்திக்கப் போகிறோம்?. அப்படி சந்திக்கிற போது என்னென்ன விஷயங்களை தடங்கல்களை எதிர்கொள்ளப் போகிறோம்?. இதிலிருந்து மீண்டு வெற்றி பெற வேண்டுமென்றால் கட்டாயம் நமக்கு ஒரு மாற்றுச் சிந்தனை இருந்தாகவேண்டும். அந்த மாற்று சிந்தனை என்ன என்பதைப்பற்றி அகில உலகமும் யோசித்துக் கொண்டே இருக்கிறது.தங்களது துறை சார்ந்த விஷயங்களில் எப்படி எல்லாம் புதுமைகளைப் புகுத்த முடியும் என்று அரசுடனும் மற்றுமுள்ள விஞ்ஞானிகள் உடனும் அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா  அடுத்த இரண்டு வருடங்களில் தொழில்கள் தங்களை பாதுகாத்துக் கொண்டாலே மிகப்பெரிய வெற்றியை அடைந்ததாக பொருள்படும் என்றார்..இது உண்மைதான் என்பது மாதிரி தெரிகிறது. அதனால் எதை நோக்கி திருப்பூர் செல்ல வேண்டும் என்பதுதான் இந்தக் கட்டுரையின் மையப்புள்ளி.
இதுவரை திருப்பூர்
எழுபதுகளின் தொடக்கம் திருப்பூர் ஏற்றுமதியை நோக்கி தன் பார்வையை திருப்பியது. அதுவரை இந்திய மார்க்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்த நிறுவனங்கள் மற்றும் சிறு சிறு உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள். அன்று முதல் சற்றேறக்குறைய நாற்பதாண்டு காலம் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு தனி முத்திரையைப் பதித்து, திருப்பூர், ஒவ்வொரு வருடமும் குறைந்தது 10 சதவீத வளர்ச்சியை எட்டி, இன்றைக்கு 30,000 கோடி ரூபாய் இலக்கை எட்டியிருக்கிறது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றுமதியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை.இதற்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிற பருத்தி ஆடைகள் மீதான இறக்குமதி வரி விலக்கு ஒரு சில நாடுகளில் நீக்கப்பட்டது முக்கியமான காரணம். இந்தியா ஒரு முன்னேறிய நாடாக மாறியதால் அந்த வரி விலக்கு நீக்கப்பட்டது.. அதேநேரம் வங்காளதேசத்தில் உற்பத்தி செலவு குறைவு. அரசின் ஊக்குவிப்பு திட்டங்கள் அதிகம். அங்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீதான சுங்கத்தீர்வை விலக்கு போன்ற சாதகமான காரணிகள் வங்காளதேசத்தை முன் நிறுத்தின. இதனால் இன்று உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராக வங்காளதேசம் உயர்ந்துள்ளது .அதேநேரம் வியட்நாம் கம்போடியா பர்மா போன்ற புதிய புதிய நாடுகள் இந்தியாவுக்கு போட்டியாக சீனாவின் உதவியுடன் வளர்ந்து வருகின்றன. இதுவும் திருப்பூரை பாதித்திருக்கிறது . எல்லாவற்றுக்கும் மேலாக பருத்தி ஆடைகளின் விலையும் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதார நிலையும் சரிவர பொருந்தி வராத காரணத்தினால், பருத்தி ஆடையின் சர்வதேச மார்க்கெட் குறைந்துள்ளது. திருப்பூர் தன்னை அதற்கு ஏதுவாக செயற்கை இழை ஆடைகளை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. ஆகவே இன்றைய திருப்பூருக்கு இந்த கொறோனா வைரஸ்  வரப்பிரசாதமாக மாறுமா அல்லது சாபம் ஆக முடியுமா என்பது திருப்பூர் எந்த திசையை நோக்கி இனிமேல் பயணிக்க போகிறது என்பதை பொறுத்து அமையும்.அந்த புதிய முயற்சியின் பின்னால் புடைந்திருக்கும்  பொருளாதாரப் பொக்கிஷம் என்ன என்பதைப் பற்றிக்கூட திருப்பூர் இன்னும் சிந்திக்க ஆரம்பிக்க வில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம்.
அதிகமாக பத்திரிக்கை படிப்பவர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ஒரு மீம்ஸ் பார்த்திருக்கக்கூடும் ஒருவர் தன் உடம்பு மட்டுமல்லாமல் தன்னுடைய இரு சக்கர வாகனத்திற்கும் சேர்த்து 20 கிலோ மஞ்சளை அப்பிக்கொண்டு வண்டி ஓடிக் கொண்டிருப்பதும், முக கவசத்திற்க்கு பதிலாக ஒரு கொத்து வேப்பிலையை முகத்துக்கு நேராக கட்டிக்கொண்டு வண்டி ஓட்டிக் கொண்டிருப்பதும்,  ஈரோடு மாவட்டம் முழுவதும் பல கிராமங்களில் மஞ்சள் வேப்பிலை கலந்த தண்ணீரை லாரிகள் தங்கள் ஊருக்கு வெளியே உள்ளேயும் தெளித்துக் கொண்டிருப்பதயும் புகைப்படங்களாக பார்த்திருப்பீர்கள்.
 இது ஒன்றும் எள்ளி நகைக்கிற  விஷயம் அல்ல. இதற்கு பின்னால் பல்லாயிரக்கணக்கான வருட தமிழனின் தொன்மையான இயற்கை மற்றும் சூழல் பற்றிய அறிவு இருக்கிறது. அதை இந்த covid-19 காலத்தில் மிகவும் எளிதாக நாம் கையாண்டு பணம் பண்ணியிருக்க முடியும். இந்த  நோய்க்கு எதிர்ப்பு சக்தி உருவாக்கக்கூடிய ஆடைகளை ,முக கவசங்களை, கையுறைகளை  தயாரித்து இருக்க முடியும்.அதை விற்று பெறும் பொருள் ஈட்டி இருக்க முடியும். ஆனால் ஏன் பின் தங்கினோம். யோசிப்போமா??
அதேபோலவே கடந்த பத்து வருடங்களாகவே, உங்கள் வீட்டில் குடிநீரை செம்பு பாத்திரத்தில் வைத்து குடியுங்கள். செம்பு பாத்திரம் இயற்கையான கிருமிநாசினி, என்றெல்லாம் பரப்புரை செய்யப்பட்டு செம்பு பாத்திரங்கள் மிகப் பெரிய அளவில் விற்பனையானது. அதுவும் ஒரு திராவிட விஞ்ஞானம். திராவிட அறிவு. ஆனால் இதை கற்றறிந்த  ஒரு சிறிய கூட்டம், ஏதோ பொய்யைச் சொல்லி ,கங்கையிலே ஓடுகிற கழிவுநீரை ஒரு செம்பு பாத்திரத்தில், அடைத்து கங்கா ஸ்நானம் ஆச்சா? என்று கேட்டு , கேள்வியோடு மூடநம்பிக்கையும் உங்கள் மனதில் பதித்து பணம்  பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் தானே?
ஊண்மையில் செம்பு ஒரு இயற்கையான கிருமி நாசினி.  அந்த காலத்து அகத்தியர் முதல் இன்றைக்கு சென்னையில் வசிக்கும் அகஸ்தீஸ்வரன் வரை செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். பழம்பெருமை பேசி, நாம்தான்  அதை இந்த உலகத்துக்கு எடுத்து சொன்னோம் என்று உரக்க கூவி, மூலையில் முடங்கி விட்டோம்.
 ஆனால் இஸ்ரேலியர்களும், இன்றைக்கு கொரோனாவல் அதிகமாக பாதிக்கப்பட்ட இத்தாலியர்களும் அதோடு நின்றுவிடவில்லை. அதன் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு,
 காப்பர் நானோ துகள்களை கொண்டு நூல் நெய்து, அதில் முகக்கவசம் தயாரித்து, covid-19 எதிர்க்கக்கூடிய அல்லது தடுத்து நிறுத்தக்கூடிய காப்பர் முகக் கவசங்கள் என்று பெயரிட்டு, ஒரு முகக் கவசத்தை சற்றேறக்குறைய 25 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பு 1800 ரூபாய்க்கு) முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குர்தா செட் சற்றேறக்குறைய 50 அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய ரூபாய் மதிப்பு 3600 ரூபாய்க்கு) விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த தொழில்நுட்பத்தை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கையில் வைத்திருந்த நாம் ஏன் தவற விட்டோம்?யோசிப்போமா??
இந்த சுட்டியை சொடுக்குங்கள்..
https://kuhncoppersolutions.org/product/well-mask/
https://www.copperclothing.com/
இந்தக் கேள்விக்கு நீங்கள் விடை கண்டுபிடிக்க முயற்சித்தால்,நீங்கள் இந்தியாவில் தான் கல்விக்காக செலவிடப்படும் தொகை மிகக் குறைந்த அளவில் இருக்கிறது என்பதும், நம் கல்வி முறை
இன்றளவும் அகில உலக அளவில் மிகச்சிறந்த தொழில்நுட்ப அடிமைகளை மென் பொறியாளர்கள் என்கிற பெயரில் உருவாக்கிக் கொண்டிருக்கும் தேசம் தான் என்பதுவும் புரியும்.
இந்தியாவில்  கல்வியாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் இடையில் ஒரு பந்தத்தை, புரிந்துணர்வை, கூட்டு முயற்சியை உருவாக்கத் தவறி விட்டோம் என்பதுவும் புரியும்.
இது இந்திய ஜவுளித் துறையில் ஈடுபட்டு இருக்கிற பெருநிறுவனங்களின் தோல்வியா, அல்லது இந்த அரசின் கல்விக்கொள்கையின் தோல்வியா என்று கண்டுபிடிப்பதற்கு நாம் தயாராக இல்லை.ஆனால்??
அதைப்போலவே  தோல் பொருட்கள் அனைத்தும் மாட்டுத் தோளில் இருந்தும், எறுமைத்தோளில் இருந்தும் உருவாக்கப்படுகிறது என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்.
 வெஜிடேரியன் தோல் செய்ய முடியுமா என்று ஏன் சிந்திக்கவில்லை? முடியும் என்பது தானே நிதர்சனம்? முடியும் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் கேரளாவில்.  சுஸ்மித் சீ சுசீலன் மற்றும் அவரின் குழுவினர்.அவர்கள் எதில் தயாரிக்கிறார்கள் தெரியுமா? நாம் தினசரி பயன்படுத்துகிற  தேங்காயிலிருந்து. எப்படி என்பது விஞ்ஞானம் ?எப்படி சாத்தியப்படுத்தி இருக்கிறோம் என்பது வியாபாரம்? கடந்த மூன்று வருடங்களாகவே வெஜிடேரியன் தோல் தயாரிக்கப்பட்டு உலகின் மிகச்சிறந்த கடைகளில் பெண்களின் கைப்பை, ஆண்களின் காலணி போன்றவை தயாரித்து  மிக அதிக விலைக்கு விற்க்கப்படுகிறது.
எனக்கும் உங்களுக்கும் இது தெரியாதது ஆச்சரியம் ஆச்சரியமல்ல அறியாமை..
சொடுக்குங்கள்..
https://www.architecturaldigest.in/content/malai-a-sustainable-vegan-alternative-to-leather/#:~:text=Malai%2C%20a%20company%20based%20in,%2C%20durable%2C%20bio%2Dcomposite%20material&text=Leather%20has%20been%20used%20extensively,especially%20in%20the%20fashion%20industry.
இதைவிடவும் மிக முக்கியமான ஒரு புதிய கண்டுபிடிப்பு கிராஃபைட் ஃபைபர். நானோ துகள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி  இவற்றை இங்கிலாந்தில் தயாரிக்கிரார்கள். இந்த ஆடைக்கு 100 வருட காலமாக ஆயுள் உண்டு என்று உறுதியளித்து ஒரு  டீ ஷர்ட்டை 5000 ரூபாய்க்கும், ஒரு ஜாக்கட்டை 52000 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த உண்மையும் நமக்கு இந்த கொரோனா காலத்தில் தான் தெரிய வருகிறது. அணுவைப் பிளந்து ஆழ் கடலை புகுத்தி... இதான் நானோ டெக்னாலஜி...
சொடுக்குங்கள்.
https://shopgrapheneplus.com/
https://www.vollebak.com/product/graphene-jacket-1/
நாம் இப்போது எதை நோக்கி போக வேண்டும் தெரிகிறதா? கொஞ்சம் அசந்தால் இன்றைக்கு இந்திய அளவில் மிக அதிகமாக பேசப்படுகிற மாட்டு மூத்திரத்டை கூட அமெரிக்காகாரன் பேட்டன் பதிவு செய்துவிட்டு என்னை கேட்காமல் யாரும் மாட்டு மூத்திரத்தை அருந்தக்கூடாது என்று சொல்லும் காலம் வரலாம். உண்டா இல்லயா?
ஆடுத்த தலைமுறை இளைஞர்கள் பல்வேறு வெளிநாடுகளில் சென்று படித்து வந்திருந்தாலும் கூட, இந்தமாதிரியான புதுப்புது முயற்சிகளை எடுப்பதற்கு தயங்குகிறார்கள் அல்லது அவர்களை ஊக்குவிப்பதற்கு பெற்றோர் தடையாக இருக்கிறார்கள் என்பது நான் கண்கூடாக கண்ட உண்மை.இப்போதெல்லாம்,பாரதியின்  இந்த வரிகள் அடிக்கடி என்னை கேள்வி கேட்கிறது...உங்களையுமா?
ஊக்கமும் உள்வலியும் உண்மைப்பற்றும் இல்லாத மாக்களுக்கோர்கணமும் வாழத்தகுதியுண்டோ?
நாம் எங்கு தவறு செய்கிறோம்?  முயற்சி எடுக்க நம்மைத் தடுப்பது எது ?இன்றைக்கு விரல்நுனியில் தரவுகள் இணய தளத்தில் பரவிக்கிடக்கின்றன. அதைக்கூட பார்க்க முடியாத அளவுக்கு நம்மை வைத்திருப்பது எது?அதற்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் நம்மைத் தடுப்பது எது?  முயற்சியின்மையா, அது நம்மால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையா? இரண்டும் இல்லை .நம்மால் இதை சந்தைப்படுத்த முடியாது என்கிற இயலாமையா?
உங்களை மடை மாற்ற ஒரு கவிதை.........
சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாது தான்.
என்றாலும்,
எந்தப் பறவையும்
மழை பெய்ய வேண்டாம்
என்று மன்றாடுவதில்லை......
மரத்தின் கிளையில்
கூடுகட்டும் பறவைக்கு
அடிக்கிற காற்றின் மீது அச்சம் இல்லை.
காரணம்,
பறவை,
கிளையை நம்பி
வாழவில்லை,
தன் சிறகை நம்பி
வாழ்கிறது.......

இருட்டு வந்தால் என்ன
விடியாமலா போய்விடும்
என்பதை வார்த்தையாக அல்ல
வாழ்க்கையாக நினைத்தவர்கள்
முன்னேறுகிறார்கள்....
எப்படியாவது
பிழைத்திருக்க வேண்டும் என்பது பிழை.
இப்படித்தான் வாழ்வேன் என்பதே சரி,
பிழைத்திருந்தால்
போதுமா?
தலைமுறை தாண்டியும்
நிலைத்திருக்க வேண்டுமா?

அவரவர் வாழ்க்கைதான்
அவரவரை
அடையாளம் காட்டும்.
-----------------------
எந்த ஒரு புதிய கண்டுபிடிப்புக்குப்பின்னும் அதை பற்றிய விஞ்ஞான அறிவை ஆவணப்படுத்தி இருக்க வேண்டும்.இந்த ஆவணப்படுத்துதல் பெரிய கல்வி நிறுவனங்களாலும் , ஆராய்ச்சி நிறுவனங்களாலும்
மட்டுமே சாத்தியப்படும். அதன் தொடர்ச்சியாக அந்தப் பொருளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஒரு தொழில் நிறுவனம் முன்வரும்.அந்தத் தொழில் நிறுவனத்துக்கும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இடையில் ஒரு சந்தைப்படுத்துதல் தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும்.சில நேரங்களில் அந்த ஆராய்ச்சிக்கு உண்டான  செலவை அந்த நிறுவனமே முன்கூட்டியே வழங்கிவிடும். இப்படி ஒரு புதிய கண்டுபிடிப்பை நைக்கி Nike  நிறுவனத்தினர் சந்தைப்படுத்தி இருக்கிறார்கள். அதுதான் தண்ணீர் இல்லாமல் செயற்கை நூல் இழையை சாயம் ஏற்றுவது. இதை கண்டு பிடித்தது ஹாலந்தில் உள்ள ஒரு நிறுவனம். இதற்குண்டான இயந்திரங்களை செய்வது தைவானில் உள்ள ஒரு நிறுவனம்.

சில நேரங்களில் அரசும் தன் முனைப்பாக இந்த மாதிரி கண்டுபிடிப்புகளில் பெரும் தொகையை செலவிடும். உதாரணத்திற்கு மைசூரிலுள்ள சி எஃப் டி ஆர் ஐ CFTRI உணவு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு  கண்டுபிடிப்புகளை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது. அதைப்போலவே மத்திய பாதுகாப்பு துறையும் பல்வேறு கண்டுபிடிப்புகளை விற்று வருகிறது. ஆனால் மிகப் பெரிய கல்வி நிறுவனங்கள் இத்தகைய முன்னெடுப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. இந்த இடத்தில் ஒரு கேள்வியை முன்வைப்பது எனக்கு நியாயமாகப் படுகிறது. இன்றைக்கு உலகின் மிகப் பெரும் பணக்காரராக இருக்கிற அம்பானி குழும நிறுவனம் தன் தொழிலை ஆரம்பித்தது விமல் ஆடைகள் மூலமாகத்தான். ஆனால் அதற்குப் பின்னர் அவர்கள் ஆடைகள் மட்டுமல்ல வேறு எந்தத் துறையிலும் இம்மாதிரியான முன்னெடுப்புகளை செய்வதற்கு பெரும் தொகை செலவிட்டதாக தரவுகள் இல்லை . ஏன் என்பதை அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியுமா என்று பாருங்கள்.அரசும் தன் பங்களிப்பை சரிவர செய்யவில்லை என்றே தோன்றுகிறது. நாட்டின் மொத்த வருமானத்தில் மிகக் குறைந்த அளவே கல்விக்காக செலவிடுகிறது இந்த அரசு என்பது பல்வேறு தரவுகள் மூலம் நமக்குத் தெரிகிறது. ஆனால் விதிவிலக்காக,சென்னையில் உள்ள ஐஐஐடி போன்ற ஒரு சில கல்வி நிறுவனங்கள் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கின்றன. இது மகிழ்ச்சியான விஷயம் தான்.

அதேபோலவே இன்று உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி மிக அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக  காற்றும், நீர்  நிலைகளும் மாசுபடுதல்.
இந்த மாசுபடுதலை குறைக்க ஒரு மிகப்பெரிய இயக்கம் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. அந்த இயக்கம் மறுசுழற்சி (Recycle) குறைந்தபட்ச மாசு ஏற்படுத்துதல் ( Reduce) ஒருமுறை அணிந்த ஆடைகளை மீண்டும் திரும்ப அணிந்துகொள்ளுதல் ( Re Use) விலங்குகளுக்கும் இயற்கை வளங்களுக்கும் ஏற்படுகிற மாசைக் குறைத்தல் போன்றவற்றுக்காக பெரும் பணம் செலவு செய்கின்றனர்.
அதன்மூலம் இப்பொழுது க்ற்றாழை நார் ஆடைகள், வாழைத்தண்டு நார் ஆடைகள், சணல் இழை ஆடைகள் போன்றவை சிறிது முக்கியத்துவம் பெறுகின்றன. சணல் தவிர மற்ற இரண்டின் மூலப்பொருட்களும்
 நம் அருகில் இலவசமாகவே கிடைக்கிறது. ஆனால் அதை எடுத்து அவற்றை ஆடைகளாக மாற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் நம்மிடம் இல்லை என்பது, பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்லப்படுகிற கருத்து. ஆனாலும் திருப்பூர் தொழில் துறையினர் இதனை முன்னெடுக்க வில்லை காரணம் என்னவாக இருக்கும்?
 திருப்பூரைச் சுற்றி பல லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டு, வாழை இலையும், வாழைப்பழமும் விற்பனைப் பொருளாக அனுப்பப்பட்டு, வாழைத்தண்டு மாடுகளுக்கு தீவனமாக போடப்படுகிறது.

 அரசு இந்தத் துறையில் தாராளமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் .அந்த முதலீட்டின் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சிகளையும்  கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்த முடியும். சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு மிகப்பெரிய தொகையை செலவு செய்ய நிறுவனங்கள் அப்போதுதான் தயாராகும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களையும் ஆட்டோமேஷன் என்று சொல்லுகிற தானியங்கல் தொழில்நுட்பங்களையும் இந்த துறையில் புகுத்த வேண்டும், அப்படி புகுத்தும் பொழுது  வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் போட்டியிட முடியும் . அந்தப் போட்டியின் மூலம் தான் பெரும் பொருள் ஈட்ட முடியும் .
 அதே நேரத்தில் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் பொதுவாகவே தங்களுக்கு என்று ஒரு சொந்த பிராண்ட் இல்லாததனால் மேற்கண்ட நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை.இதனால்தான் இறக்குமதியாளர்களின் தயவில் வாழ்கிற நிலை என்பது இன்னும் திருபூருக்கு புரியவில்லை. புதிய புதிய பிராண்டுகள் ஆன லுலுமென் lulumon போன்றவை புதிய தொழில்நுட்பத்தை செயல் ஆக்கியதன் மூலம் குறைந்த காலத்தில் அமெரிக்காவின்  மிகப்பெரிய நிறுவனமாக மாறியிருப்பதை கண்டு நான் வியப்படயவில்லை.
புதிய தொழில்நுட்பங்கள் ஆயத்த ஆடைகளின் ஒவ்வொரு பிரிவிற்கும் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனித்தால், விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட ஆடைகளை புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கும் போது அவை அந்த  விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பையும் ஒரு தன்னம்பிக்கையும் கொடுக்கும் .அந்த தன்னம்பிக்கை வெற்றியை அவனுக்கு கொடுக்கும்.அது ப்ராண்டை தூக்கி பிடிக்கும்..Nike, Adidas போன்றவை அப்படி உருவானவைதான்.
What is Nike AeroAdapt?
https://news.nike.com/news/nike-aeroadapt-material-innovation
மேல் உள்ள லிங்கை அழுத்துங்கள்.

ஹாக்கி ஃபுட்பால் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்போது பார்த்தீர்களானால், அந்த வீரர்கள் உடலில் இருந்து வெளியே வருகிற வியர்வையில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை பிழிவதை பார்த்திருப்பீர்கள் .அந்த அளவு  வியர்வை வெளிவரும்போதுஉடலின் வெப்பநிலையும் ஏறி இறங்க தான் செய்யும்.  அவர்கள் விளையாடுகிற இடத்தையும்  காலநிலையையும் கொண்டு பார்த்தால் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய காரணியாக அதுஅமையும். இந்திய வீரர்கள் பல்வேறு சீதோசன நிலைக்கு தங்களை ஈடுபடுத்த முடியாமல் தோல்வி கண்ட வரலாறு உங்களுக்கு தெரியும். அதைப்போலவே இந்தியாவின் வெயில் தாக்குப் பிடிக்காமல் இங்கிலாந்து க்ரிக்கெட்அணி தோல்வியுற்றதும் உங்களுக்கு தெரியும் .இதையெல்லாம் எப்படி சரி செய்ய முடியும்?  வெற்றி ஒன்றுதானே இலக்கு? அதற்குத்தான் நைக்கி ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது .அந்த தொழில்நுட்பம் விளையாட்டு வீரனின் உடல்வெப்பம் அதிகமாகும் பொழுது அவன் அணிந்திருக்கிற ஆடையில் நெய்யப்பட்ட நூல் அதை உணர்ந்து தானாகவே விரிந்து, அவன் உடல் வெப்பத்தை வெளியேற்றி ,வெளிக்காற்றை உள்வாங்கி, அவன் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது .நினைத்துப் பார்க்க முடியுமா இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் இன்று?
வெற்றிக்கு வழி என்ன என்று திருப்பூர் எப்பொழுது தெரிந்து கொள்ளும்?
இப்போது ஒரு சில எளிமையான தொழில் நுட்பங்களைப் பார்ப்போமா?
நாகரீக மனிதன், கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடுகிற, ஓய்வில்லாத, 24 மணி நேரமும் வேலை செய்துகொண்டு இருக்கிற, ஒரு பிராணி.சாதிக்க வேண்டும்,  புகழ் ஈட்ட வேண்டும், அதனால் பொருளீட்ட வேண்டும்  என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு, தன்னுடைய ஆடைகள் கசங்கி இருந்தால் பிடிக்காது. .அதேநேரம் முதல் நாள் அணிந்த ஆடைகளை அடுத்தநாள் அணிவதற்கு சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். காரணம் அவனுக்கு சுருக்கை நீக்குவதற்கு இஸ்திரி போடுவதற்கு கூட நேரம் இருக்காது. இதை தெரிந்து கொண்ட ஒரு சில நிறுவனங்கள்  இவன் இந்த பணிக்காக ஒரு குறிப்பிட்ட அளவு செலவு செய்யத் தயங்க மாட்டான் என்பதை புரிந்து ஆடைகள் தயாரிப்பதற்கு முன்பு அந்த துணிகளில் ஒரு வேதியியல் பொருளை பாவி விட்டு(  Chemically treated) துணிகளை சுருக்கமில்லாத துணிகளாய் ( Wrinkle free) மாற்றினார்கள். இன்றைக்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இப்படிப்பட்ட ஆடைகளை தயாரிப்பவர்களுக்கு புகழையும் பணத்தையும் தந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படவில்லை என்பது வருத்தமே.
 அதைப்போன்றே அப்படி வெளியில் சுற்றுகிற மனிதன் பல்வேறு இடங்களில் பல்வேறு தொற்றுக்களை நுண்ணுயிர் கிருமி( Bacterial, Virus) மூலம் பெறுகிறான். அதனால் அவனுக்கு பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புண்டு. அதை தவிர்க்க (Anti microbial) நுண்ணுயிர் கிருமி எதிர்ப்பு,நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு சக்தி கொண்ட பல்வேறு  வேதியல் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணிகளை தயாரிக்க, அது சந்தையில் சக்கை போடு போடுகிறது..
இதைப்போன்றே கறைபடாத ( Stain repellant, Water resistant) தண்ணீர் ஒட்டாத துணிகளுக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அப்படியே கறை பட்டாலும், அப்படிப்பட்ட  கறைகளை எளிதில் நீக்கக்கூடிய ரசாயனங்களை கொண்டு பதப்படுத்தப்பட்ட துணிகளுக்கும் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது..
அதைப்போலவே நைலான் ( Nylon) இழையை விடவும் ஒரு சிறந்த இழை ) சொரோனா  இழை.( Sorona from Dupont) http://sorona.com/ 
இதை சைனாவில் அவர்கள் எப்படி வெற்றிகரமாக பயன்படுத்தினார்கள் என்பதை பற்றி அறிந்தபிறகும்,திருப்பூர் ஏன் அதை நோக்கி இன்னும் நகரவில்லை?
Covid-19 சபிக்கப்பட்ட சாத்தானின் சாபமா அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட தேவதைகளின் வரமா என்பதை திருப்பூர் முடிவு செய்ய வேண்டும்..செய்வார்களா?? .

M.M.Sampath Kumar .
P 2 Clothing Company
#08,Narayanasamy Nagar, Gandhi Nagar PO
Tirupur..India ..641 603
email. sam@p2clothing.in
skype..sam47401..
Ph ; +91 989  473 6388 
Twitter..@sam4740
Blog. https://yuvrajsampath.blogspot.com/

Sunday, June 7, 2020

திருப்பூர் எதை நோக்கி பயணிக்க வேண்டும்?


திருப்பூர் எதை நோக்கி பயணிக்க வேண்டும்?
யுவராஜ் சம்பத்..07.06.2020
=======================
சமீபத்தில் Vouge Institute of Arts and Design பெங்களூரு  மற்றும் திருப்பூர்
TEA NIFT நிறுவனமும் சேர்ந்து நடத்திய Webinar வெபினரின் முதல் பாகத்தில்  சைனாவை சேர்ந்த Newell Textile MD திரு முகமத் நூறுல்லா கலந்து கொண்டார். அவர் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்தாலும் 20 ஆண்டுகளாக பல்வேறு மேலைநாடுகளில் பல்வேறு நிறுவனங்களில்  மிகப்பெரிய பொறுப்புகளை வகித்து, தற்போது சைனாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த வெபினாரில் அவர் இந்தியாவிற்கு வெளியே டெக்ஸ்டைல் துறையில் நடந்து வருகிற பல்வேறு கண்டுபிடிப்புகளைப் பற்றியும், புதுமைகளை பற்றியும் ,அந்த புதுமைகளை இந்தியாவில் எப்படி தொழில்துறையினர் புகுத்தி, இந்திய திருநாட்டிற்கு வெகுவான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித் தர முடியும் என்பது பற்றியும்  ஒரு மிக நீண்ட விளக்கத்தை அளித்தார். போட்டியாளர்களை சமாளிக்க , நிலைத்து நிற்க திருப்பூர் வியாபார நிறுவனங்கள் என்னென்ன வழிமுறையை கையாள வேண்டும் என்பதும் அதற்கு அரசு எவ்விதம் உதவ முடியும் என்பதும் அவருடைய பேச்சின் முதல் தொகுப்பாக இருந்தது.
அதையொட்டி இந்த கட்டுரை..
 அரசு இந்தத் துறையில் தாராளமாக அன்னிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் .அந்த முதலீட்டின் மூலம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களையும் ஆராய்ச்சிகளையும்  கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்த முடியும். சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு மிகப்பெரிய தொகையை செலவு செய்ய நிறுவனங்கள் அப்போதுதான் தயாராகும். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களையும் ஆட்டோமேஷன் என்று சொல்லுகிற தானியங்கல் தொழில்நுட்பங்களையும் இந்த துறையில் புகுத்த வேண்டும், அப்படி புகுத்தும் பொழுது  வியட்நாம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் போட்டியிட முடியும் . அந்தப் போட்டியின் மூலம் தான் பெரும் பொருள் ஈட்ட முடியும் .
 அந்தந்த தொழில்நுட்பங்கள் எவை என்பதைப் பற்றி அடுத்து வருகிற பத்தியில் பார்ப்போம்.
அதே நேரத்தில் இந்திய ஆடை உற்பத்தியாளர்கள் பொதுவாகவே தங்களுக்கு என்று ஒரு சொந்த பிராண்ட் இல்லாததனால் மேற்கண்ட நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை என்பதும் உண்மை.இதனால்தான் இறக்குமதியாளர்களின் தயவில் வாழ்கிற நிலை என்பது இன்னும் திருபூருக்கு புரியவில்லை. புதிய புதிய பிராண்டுகள் ஆன லுலுமென் lulumon போன்றவை புதிய தொழில்நுட்பத்தை செயல் ஆக்கியதன் மூலம் குறைந்த காலத்தில் அமெரிக்காவின்  மிகப்பெரிய நிறுவனமாக மாறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியபோது நான் வியப்படயவில்லை.
புதிய தொழில்நுட்பங்கள் ஆயத்த ஆடைகளின் ஒவ்வொரு பிரிவிற்கும் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனித்தால், விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட ஆடைகளை புதிய தொழில்நுட்பத்தில் உருவாக்கும் போது அவை அந்த  விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பையும் ஒரு தன்னம்பிக்கையும் கொடுக்கும் .அந்த தன்னம்பிக்கை வெற்றியை அவனுக்கு கொடுக்கும்.அது ப்ராண்டை தூக்கி பிடிக்கும்..Nike, Adidas போன்றவை அப்படி உருவானவைதான்.
What is Nike AeroAdapt?
மேல் உள்ள லிங்கை அழுத்துங்கள். நைக்கி அறிமுகப்படுத்த போகிற புதிய தொழில்நுட்பத்தை பற்றிய ஒரு செய்தி அது..
ஹாக்கி ஃபுட்பால் போன்ற விளையாட்டுகள் நடைபெறும்போது பார்த்தீர்களானால், அந்த வீரர்கள் உடலில் இருந்து வெளியே வருகிற வியர்வையில் அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளை பிழிவதை பார்த்திருப்பீர்கள் .அந்த அளவு  வியர்வை வெளிவரும்போதுஉடலின் வெப்பநிலையும் ஏறி இறங்க தான் செய்யும்.  அவர்கள் விளையாடுகிற இடத்தையும்  காலநிலையையும் கொண்டு பார்த்தால் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய காரணியாக அதுஅமையும். இந்திய வீரர்கள் பல்வேறு சீதோசன நிலைக்கு தங்களை ஈடுபடுத்த முடியாமல் தோல்வி கண்ட வரலாறு உங்களுக்கு தெரியும். அதைப்போலவே இந்தியாவின் வெயில் தாக்குப் பிடிக்காமல் இங்கிலாந்து க்ரிக்கெட்அணி தோல்வியுற்றதும் உங்களுக்கு தெரியும் .இதையெல்லாம் எப்படி சரி செய்ய முடியும்?  வெற்றி ஒன்றுதானே இலக்கு? அதற்குத்தான் நைக்கி ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது .
அந்த தொழில்நுட்பம் விளையாட்டு வீரனின் உடல்வெப்பம் அதிகமாகும் பொழுது அவன் அணிந்திருக்கிற ஆடையில் நெய்யப்பட்ட நூல் அதை உணர்ந்து தானாகவே விரிந்து, அவன் உடல் வெப்பத்தை வெளியேற்றி ,வெளிக்காற்றை உள்வாங்கி, அவன் உடல் வெப்பநிலையை சீராக்குகிறது .நினைத்துப் பார்க்க முடியுமா இந்த தொழில்நுட்பத்தை இந்தியாவில் இன்று?
வெற்றிக்கு வழி என்ன என்று திருப்பூர் எப்பொழுது தெரிந்து கொள்ளும்?
நாகரீக மனிதன், கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு ஓடுகிற, ஓய்வில்லாத, 24 மணி நேரமும் வேலை செய்துகொண்டு இருக்கிற, ஒரு பிராணி.சாதிக்க வேண்டும்,  புகழ் ஈட்ட வேண்டும், அதனால் பொருளீட்ட வேண்டும்  என்கிற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஓடிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு, தன்னுடைய ஆடைகள் கசங்கி இருந்தால் பிடிக்காது. .அதேநேரம் முதல் நாள் அணிந்த ஆடைகளை அடுத்தநாள் அணிவதற்கு சுருக்கங்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். காரணம் அவனுக்கு சுருக்கை நீக்குவதற்கு இஸ்திரி போடுவதற்கு கூட நேரம் இருக்காது. இதை தெரிந்து கொண்ட ஒரு சில நிறுவனங்கள்  இவன் இந்த பணிக்காக ஒரு குறிப்பிட்ட அளவு செலவு செய்யத் தயங்க மாட்டான் என்பதை புரிந்து ஆடைகள் தயாரிப்பதற்கு முன்பு அந்த துணிகளில் ஒரு வேதியியல் பொருளை பாவி விட்டு(  Chemically treated) துணிகளை சுருக்கமில்லாத துணிகளாய் ( Wrinkle free) மாற்றினார்கள். இன்றைக்கு இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து இப்படிப்பட்ட ஆடைகளை தயாரிப்பவர்களுக்கு புகழையும் பணத்தையும் தந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தற்போது இந்தியாவில் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படவில்லை என்பது வருத்தமே.
 அதைப்போன்றே அப்படி வெளியில் சுற்றுகிற மனிதன் பல்வேறு இடங்களில் பல்வேறு தொற்றுக்களை நுண்ணுயிர் கிருமி( Bacterial, Virus) மூலம் பெறுகிறான். அதனால் அவனுக்கு பல்வேறு நோய்கள் தாக்க வாய்ப்புண்டு. அதை தவிர்க்க (Anti microbial) நுண்ணுயிர் கிருமி எதிர்ப்பு,நுண்ணுயிர் கொல்லி எதிர்ப்பு சக்தி கொண்ட பல்வேறு  வேதியல் பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட துணிகளை தயாரிக்க, அது சந்தையில் சக்கை போடு போடுகிறது..
ஆனால், ஆயுர்வேதத்தில் உலகிலேயே முதலாவது இடத்தில் இருக்கிற, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான, நுண்ணுயிர்  கிருமிகளை அழிக்கவல்ல வேதிப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள ,மஞ்சளையும் ,துளசியையும் கொண்டு ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி நம்மால் மிகப்பெரிய வெற்றியை அடைய முடியவில்லை என்றால், அதற்குக் காரணம் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் தொழில் துறையினருக்கும் இணக்கமான ஒரு சூழல் இல்லை என்பதும், அதற்கு செலவழிக்கக் கூடிய நிதி வசதியும் தொழில் அதிபர்களிடம் இல்லை என்பதும், வேதனையான ஆனால் நிர்வாணமான உண்மை. இதற்கு அரசின் பங்களிப்பு என்ன என்று கேட்டால் மௌனம் மட்டுமே பதிலாகும். எப்பொழுது அரசு கல்விக்காக செலவழிக்கும் தொகையை குறைத்துக்கொண்டே போகிறதோ அப்பொழுது அந்த நாட்டில் விஞ்ஞான வளர்ச்சி என்பது எட்டா கனிதான்..
இதைப்போன்றே கறைபடாத ( Stain repellant, Water resistant) தண்ணீர் ஒட்டாத துணிகளுக்கும் ஒரு சிறப்பு உள்ளது. அப்படியே கறை பட்டாலும், அப்படிப்பட்ட  கறைகளை எளிதில் நீக்கக்கூடிய ரசாயனங்களை கொண்டு பதப்படுத்தப்பட்ட துணிகளுக்கும் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கிறது..
அடுத்து சணல் நார் துணிகள், ( linen) வாழை இழை நார் துணிகள், கற்றாழை  நார் துணிகள்,இன்ன பிற..இவை அனைத்தும் சுற்றுச்சூழல் பற்றி விவாதிக்கும் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாமல் பேசப்படுபவை .இந்த தொழில்நுட்பம் ஒரு ராக்கெட் தொழில்நுட்பம் அல்ல. ஆனால் இதைப் பயன்படுத்தி துணிகள் தயாரிப்பதற்கு எந்த நிறுவனமும் முன்வருவதில்லை என்ன காரணம்? நம்மிடம் இவற்றை சந்தைப்படுத்துவதற்கு வசதியும் முன்னெடுப்பும் இல்லை. இருபது வருடங்களுக்கு முன்னால் எம் டி கிராண்ட் Marketing Development  Assistance grant என்பதைப் பயன்படுத்தி எவ்வளவு முறை இந்திய ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்கள் என்பதும், அதன் மூலம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றார்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்று என்ன நிலைமை? கீழே உள்ள லிங்கை அழுத்தி நீங்களே படித்துப் பாருங்கள்

இந்த நேரத்தில் திருப்பூரில் நாம் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கு எத்தனை கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறோம் என்பதை நினைத்து நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இருந்தாலும் மீண்டும் மாசுபடுதலை தவிர்க்க வேண்டியது நம்முடைய கடமை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தண்னீர் மாசுபடுதலில் பருத்தி ஆடைகளின் பங்கு மிக அதிகம் . உலகின் மிகப்பெரிய ஒரு நிறுவனம் தண்ணீர் இல்லாமல் செயற்கை இழை துணிகளை எப்படி சாயம் ஏற்றுகிறது என்பதை பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? . இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் தற்போது இருக்கிறது , அதன் மூலம் மிகப்பெரிய பொருளீட்டிக்கொண்டிருக்கிறது. இது பற்றிய ஆராய்ச்சிகள் ஏன் இந்தியாவில் இன்னும் தொடங்கப்படவில்லை என்னும் வினா உங்கள் மனதில் எழும்புகிறதுதானே!!.. இது நம்முடைய சிந்தனைக்கு உரிய ஒரு கருத்துதான். இதில் அரசும் தனியார் நிறுவனங்களும் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களும்கல்வி நிலையங்களும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் ..செய்யுமா?
அதைப்போலவே நைலான் ( Nylon) இழையை விடவும் ஒரு சிறந்த இழை ) சொரோனா  இழை.( Sorona from Dupont) http://sorona.com/ 
 இதை சைனாவில் அவர்கள் எப்படி வெற்றிகரமாக பயன்படுத்தினார்கள் என்பதை பற்றி அறிந்தபிறகும்,திருப்பூர் ஏன் அதை நோக்கி இன்னும் நகரவில்லை?
 கடைசியாக கிராபின் பைபர். நாம் தினசரி உபயோகப் படுத்துகிற பென்சிலின் நடுவில் இருப்பதுதான் கிராபின்.குண்டு துளைக்காத கவச ஆடைகளை செய்வதற்கு இந்த கிராபின் பயன்படுகிறது என்பது பழமையான செய்தி. ஆனால் கொறோனா வைரஸை தடுப் பதற்கு இது பயன்படுகிறது என்பது இன்றைய செய்தி. இதுவரை எந்த ஒரு பெரிய பிராண்டும் இதில் ஆடைகள் தயாரிக்க முயலவில்லை. ஆனால் இதைவிட சிறந்த ஒரு வைரஸ் கொல்லி இப்போதைக்கு இல்லை. ஆதலால் இந்த ஆராய்ச்சிகள் உடனடியாக இங்கு தொடங்கப்பட வேண்டும் .அதன் மூலம் இந்திய தொழில்துறை பெரும் பயனை அடைய வேண்டும் . அப்படி அடைந்தால் நமக்கு மிகப் பெருமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

திருப்பூர் ஏற்றுமதியாளர்களே செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

M.M.Sampath Kumar .
P 2 Clothing Company
#08,Narayanasamy Nagar, Gandhi Nagar PO
Tirupur..India ..641 603
email. sam@p2clothing.in
skype..sam47401..
Ph ; +91 989  473 6388 
Twitter..@sam4740
Blog. https://yuvrajsampath.blogspot.com/