Saturday, July 25, 2020

பொய் வண்ணம்..4..தொலைந்துபோன நொய்யல்...

 நினைவு தெரியாத நாட்களில் நான்
நிர்வாணமாய் குளித்த நதி
 கோடையிலும் குடிநீர் தந்த
 பாறை இடுக்கு சுனை
ஏறி அமர்ந்து
குதித்து ஆடிய மொட்டை மரம்
ஓனாணுக்கு பைத்தியம் பிடிக்க
பால் தந்த அந்த பாச்சாம்பால் செடி
 தெற்குக் கொட்டகை நிரம்பி வழிந்த போது
 வடக்கு கொட்டகைக்கு ஓட உதவிய நல் பாதை
பூ பறிக்கும் நோம்பிக்கு
பொரி முறுக்கு பழம் சாப்பிட்டு
எச்சில் பட்ட பொன் மணல் பரப்பு ..

நினைவு தெரிந்ததற்குப் பின்னால் 
எனக்கு ஊழலையும்
அரசியல்வாதிகளையும்
 அறிமுகப்படுத்திய வெள்ளப்பெருக்கு
 அதனால் உடைந்த பாலம்..

 எல்லாம் தொலைந்து போனது இப்போது
தொலைந்துபோன நொய்யலுக்கு
சாட்சியாய் இருக்கிற
சாயக்கழிவு நீரே
நீயே
உண்மை கூறு...

No comments:

Post a Comment